’தளபதி 64’க்கு முன்னரே விஜய்யுடன் மோதும் விஜய்சேதுபதி!

sivalingam| Last Modified வெள்ளி, 4 அக்டோபர் 2019 (19:42 IST)
தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தளபதி 64’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய்யும் விஜய்சேதுபதியும் மோதும் காட்சிகள் எப்படி இருக்கும்? என்பதை தற்போதே விஜய் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் கற்பனையில் மிதந்து வருகின்றனர். இந்த மாஸ் காட்சிகளை காண இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்

இந்த நிலையில் ’தளபதி 64’ படத்திற்கு முன்னதாகவே விஜய்யுடன் மோத விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளார். ஆம் வரும் தீபாவளி திருநாளில் விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதே தினத்தில் விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜய் மற்றும் விஜய்சேதுபதி படங்கள் ஒரே நாளில் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கார்த்தியின் ’கைதி’ திரைப்படமும் தீபாவளி திருநாளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், ஜான்விஜய், சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக் ராகுல் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :