1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (18:21 IST)

விஜய்,. அஜித் பட ஸ்டண்ட் மாஸ்டர் இயக்குநர் அவதாரம் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பணியாற்றிவரும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் விரைவில் ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமாரின். வீரம்,  விஸ்வாசம், விவேகம் போன்ற படங்களுக்கு அதிரடி சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுத்து மக்கள் மனதிலும் சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் செல்வா. இவர் அஜித் படம் மட்டுமின்றி நடிகர் விஜய்யின் ஜில்லா, பைரவா, உள்ளிட்ட படங்களிலும்  ஸ்டண்ட் மாஸ்டாகரப் பணியாற்றியிருக்கிறார்.

தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்  இவ்வளவு பிஸி பணிகளுக்கு இடையே அவர் விரைவில் ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும் இப்படத்தை செல்வா  உடன் இணைந்து பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.