1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Vignesh shivan may direct pradeep ranganathan

ட்ரண்ட்டிங் நடிகரை இயக்குகிறாரா விக்னேஷ் சிவன்?

அஜித் 62
விக்னேஷ் சிவன் அடுத்து இயக்க உள்ள படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக ஒரு படத்தை இயக்கி ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விக்னேஷ் சிவன். இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்க விஜய் சேதுபதியோடு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சமீபத்திய ஹிட்டால் கவனம் பெற்றிருக்கும் லவ்டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 
அடுத்த கட்டுரையில்
உன் புன்னகையும் சிரிப்பும் எனக்கு நோய் தொற்று - காதலனுடன் மலாய்கா அரோரா!