திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (09:57 IST)

கமல்ஹாசனால் வாய்ப்புகளை இழந்தேன்: ‘வாரிசு’ நடிகை பேட்டி..!

kamal
சலங்கை ஒலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் என்று வாரிசு படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் 
 
சலங்கை ஒலி திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நான்தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன் என்றும் எனக்கு இயக்குனர் கே விசுவநாத் அட்வான்ஸ் கொடுத்திருந்தார் என்றும் தெரிவித்திருந்தார். 
 
ஆனால் கமல்ஹாசன் தேதியை உடனே கொடுக்காததால் படப்பிடிப்பு தாமதமானது என்றும் அதற்குள் நான் என்டி ராமராவ் படத்தில் நடிக்க சென்று விட்டதால் சலங்கை ஒலி படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
சலங்கை ஒலி படத்தில் நான் நடிக்காததால் கே. விசுவநாத் அவர்களுக்கு என் மீது கோபம் என்றும் ஆனால் அந்த கேரக்டருக்கு ஜெயப்பிரதா தான் சரியான நடிகை என்பது அவருடைய அற்புதமான நடிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva