கதறிய வனிதாவுக்கு கங்கணம் கட்டும் நெட்டிசன்ஸ் - இதெல்லாம் எங்க போய் முடியுமோ!

Last Updated: வெள்ளி, 28 ஜூன் 2019 (16:14 IST)
பிக்பாஸ் வீட்டின் தலைவி கதறி கதறி அழும் ப்ரோமோவை வெளியிட்டு சிம்பதி கிரியேட் செய்த விஜய் டீவியை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். 


 
பிக்பாஸ்  சீசன் 3 நிகழ்ச்சியின் ஐந்தாம் நாளான இன்று இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் தலைவி வனிதா தன் மகனை எண்ணி அழுகிறார். இந்த வாரம் முழுக்க போட்டியாளர்களை அழவைக்கும் டாஸ்கை கொடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டிவிட்டது. 
 
உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் என்ற டாஸ்க்கிற்கு வனிதா, கண்டிப்பா என்னுடைய வாழக்கையில் மறக்கமுடியாத்த நாள் மகன் ஸ்ரீ ஹரி பிறந்தநாள். ஒன்னு குழந்தையை காப்பாத்தணும் அல்லது அம்மாவை காப்பாத்தணும் என்ற இக்கட்டான நிலைமை அது,  அப்போது அவன் எங்கிட்ட வந்தபோது அவன் அவ்வளவு அழகான குழந்தை ..ஏன் வாழ்க்கையில யாருமே என்னோடு கடைசிவரை இல்லை "யு ஆர் மைன்" என்று சொல்லு அழும்போது அவன் என் கையை பிடித்தான் ..அப்போது நன் உடனே அழுதுவிட்டேன் ... அந்த சத்தியத்தை அவன் காப்பாத்துவானா திரும்ப என்கிட்ட ஒரு நாள் வருவானா அம்மானு கூப்பிடுவானா என்று கூறி தேம்பி அழுகிறார். 
 
இதனை கண்ட நெட்டிசன்ஸ் "உங்களையும் உங்க அப்பா அப்படி தான வளர்த்திருப்பாரு"  அவரை என்ன பாடு படுத்தினீங்க இப்போ தெரியுதா என்று கூறி வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :