1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Avatar 3 release date confirmed by crew

அவதார் மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு!

அவதார் 2
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் உலகளவில் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

ஆனால் முதல் பாகம் அளவுக்கு வசூல் செய்ய முடியவில்லை. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்தால்தான், அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆகும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது.

இதையடுத்து மூன்றாம் பாகம் ‘அவதார் – நெருப்பும் சாம்பலும்’ இந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இடையில் இந்த படம் தள்ளிப் போகலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படக்குழு ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதியுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!