செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (16:51 IST)

கடைசில சித்தப்புவையும் அழ வச்சுட்டீங்களேடா - கதறிய சரவணன் உருகவைக்கும் ப்ரோமோ!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் நான்காம் நாள் முன்றாவது ப்ரோமோ வீடியோவில் பருத்தி வீரன் சரவணன் தன் வாழ்வில் தான் நடந்துகொண்டதை எண்ணி கதறி அழுத்துவிட்டார்.

 
இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் சரவணன் தனக்கு நேர்ந்த துக்கத்தை ஹவுஸ்மேட்ஸிடம்  பகிர்ந்து  அனைவரையும் கண்ணீரில் கலங்கடித்து விட்டார். 
 
இந்த ப்ரோமோ வீடியோவில் பருத்தி வீரன் சரவணன் கூறியதாவது, தனக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தாராம். அதற்கு தனது முதல் மனைவி முழு ஒத்துழைப்பும் கொடுத்து இரண்டாவது மனைவிக்கு தேவையான தாலி , பட்டுப்புடவை போன்றவற்றை வாங்கிக்கொடுத்து திருமணம் செய்து வைத்தாராம். 
 
இப்படியெல்லாம் ஒரு பெண் யாரும் இருக்கமுடியாது ஆனால் எனது முதல் மனைவி எனக்காக அவளது வாழ்க்கையை தியாகம் செய்தாள் சென்று கூறி கதறி அழுத்துவிட்டார் இதனை கேட்டு சேரன், அபிராமி, மதுமிதா என அங்கிருந்த அனைவரும் அழுத்துவிட்டனர்.