அடேய் பிக்பாஸ் என் செல்லக்குட்டியை அழவச்சுட்டல நீ நல்லாவே இருக்கமாட்ட...!

Last Updated: வெள்ளி, 28 ஜூன் 2019 (13:53 IST)
பிக் பாஸ் வீட்டின் செல்லக்குட்டி தர்ஷனை மோகன் வைத்யா திட்டி அழவைத்துவிட்டார். 


 
இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மோகன் வைத்யாவுக்கு தர்ஷனுக்கு இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் வீட்டில் இறுக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி பஞ்சாயத்து செய்கின்றனர். 
 
இந்த பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கும்போதே தர்ஷன் அப்பா என மோகன் வைத்யாவை கூப்பிடுகிறார். உடனே மோகன் வைத்யா என்ன அப்பான்னு கூப்பிடாதே அங்கிள்னு கூப்பிடு என கோபத்தோடு திட்டுகிறார். 
 
இதனால் அனைவரும் அவருக்கு அட்வைஸ் செய்கின்றனர். பாத்திமா பாபு தாயுள்ளத்தோடு தர்ஷனுக்கு ஆதரவாக பேசுகிறார். மோகன் வைத்யா திட்டியதால் தர்ஷன் கண்கலங்கி அழுகிறார். இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட ரசிகர்கள் தர்ஷனுக்கு ஆதரவாக,  அப்பா இல்லாத நிலையில் மனதார உங்களை அப்பா என்று கூப்பிடுவது ஒரு தப்பா என்று ரசிகர்கள் மோகன் வைத்யாவிடம் கோபப்பட்டுள்ளனர். மேலும் பிக்பாஸையும் திட்டி தீர்த்து வருகின்றனர் தர்ஷனின் ரசிகர்கள். 
 
 


இதில் மேலும் படிக்கவும் :