வீண்பழி சுமத்தி நாடகமாடும் மீரா மிதுன் - நெகிழவைத்த அபிராமியை பாராட்டிய நெட்டிசன்ஸ்!

Last Updated: வியாழன், 27 ஜூன் 2019 (14:55 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் நான்காம் நாள் இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் கண்கலங்கி ஹவுஸ்மேட்ஸ் மீது பழி சுமத்துகிறார். 


 
இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இந்த ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் பாத்திமாவிடம் ஹவுஸ்மேட்ஸ் தன்னிடம் நடந்துக்கொள்ளும் விதங்களை கூறி கண்கலங்கி அழுகிறார். மேலும் தன்னை பார்த்து எல்லோரும் பொறாமை படுகிறார்கள் அதற்காக தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்று கூறி அழுகிறார். 

 
அந்த நேரத்தில் அவ்வழியாக நடந்துசெல்லும் அபிராமி உள்ளே சென்று தண்ணீர் கொண்டுவந்து அழுதுகொண்டிருக்கும் மீரா மிதுனுக்கு கொடுக்கிறார். பின்னர் பாத்திமா இதோ பார் எல்லோரும் உன்னிடம் நன்றாகத்தான் பழகுகிறார்கள். நீயும் அப்படி நடந்துக்கொள் என்று கூறும் விதத்தில் சமாதானம் செய்கிறார். இப்படியாக இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது. 
 
இதை வைத்து பார்க்கும் போது மீரா மிதுன் தான் தேவையில்லாமல் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார் என தோன்றுகிறது. அவர் சரியாக பழகினால் மற்றவரும் அவரிடம் அவ்வாறே இருப்பார்கள் என புரிகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :