ஞாயிறு, 6 ஏப்ரல் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (09:36 IST)

பராசக்தி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இங்குதான் நடக்கவுள்ளதா?

சூர்யா நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ’பராசக்தி’ என்ற பெயரில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு முன்னோட்ட வீடியோவும் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில் படமாக்க வேண்டிய காட்சிகளைப் படமாக்கிவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இதையடுத்து முக்கியமானக் காட்சிகளை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மதுரையில் 60 களில் இருந்த ஒரு குறிப்பிட்ட இடத்தை செட்டாக அமைத்து படமாக்க உள்ளார்களாம்.