செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (12:57 IST)

பிக்பாஸ் வீட்டில் நுழையும் போலீஸ்! மீரா மிதுன் அதிரடி கைது?

மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். ஆனால் அவரை கண்டாலே பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சலாகிறது ஆளாளுக்கு அவருடன் சண்டையிட்டு வருகின்றனர். 


 
அதற்கு காரணம் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர்.  இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 
 
இந்நிலையில் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே அவரால் பாதிக்கப்பட்ட சிலர் குற்றவாளியை ஏன்  பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதித்தீர்கள் என எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மீரா மீதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் போலீஸ் சம்மனுக்கு அவர் ஆஜராகாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரகசியமாக வந்துள்ளார் என அவருக்கு எதிராக புகார் கொடுத்துள்ள ஜோ என்பவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
எனவே கூடிய விரைவில் போலீசார் பிக்பாஸ் வீட்டுக்குள் புகுந்து மீரா மிதுனை கைது செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.  
 
இதே பாணியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் மராத்தி 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற குற்றவாளி போட்டியாளர் அபிஜித் பிச்சுகலேவை  பிக்பாஸ் வீட்டில் நுழைந்து போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.