1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (08:47 IST)

தனுஷின் வாத்தி பட ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்!

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

இந்த படம் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் அந்த தேதியில் ரிலீஸாகவில்லை. இதையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. முதலில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக அன்புச்செழியன் கைப்பற்றியதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் பின் வாங்கி விடவே மாஸ்டர் மற்றும் கோப்ரா படங்களின் தயாரிப்பாளர் லலித்குமார் இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.