வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (20:55 IST)

செம்பி பட டிரையிலரை வெளியிடும் தனுஷ்!

sembi
இயக்குனர் பிரபு சாலமன் தமிழில், லீ, மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் செம்பி.  இப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டது எனக் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீடு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடந்தது. இதில்,  இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், செம்பி என்ற படத்தின் 2 வது டிரெயிலரை  நாளை காலை தனுஷ் வெளியிடுவார் என இயக்குனர் பிரபு சாலமன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 
Edited By Sinoj