1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (14:08 IST)

அஜித்தின் அடுத்த படத்தில் தனுஷ் வில்லனா? பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்!

dhanush 740
அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இதுவரை தனுஷ் வேறு ஒரு ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்காத நிலையில் அவர் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Mahendran