1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (12:02 IST)

சமூகவலைதளத்தில் அவதூறு… பிரபல நடிகர் காவல்துறையில் புகார்!

தமிழில் மாரி உள்பட மலையாளத்தில் பல படங்களில் நடித்திருப்பவர் டோவினோ தாமஸ். அவர் நடித்த மின்னல் முரளி மற்றும் 2018 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைய தற்போது மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் கொச்சி காவல்நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் சமூகவலைதளங்களில் தன்னை சிலர் தொடர்ந்து அவதூறு செய்து தகாத வாரத்தைகளால் தூற்றி வருவதாகவும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துணை ஆணையரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.