ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (14:17 IST)

தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தும் பிரியா பவானி சங்கர்!

மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். சில தசாப்தங்களுக்கு முன்பெல்லாம் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல வெற்றிகளைக் கொடுத்து முன்னணி நடிகையானார் பிரியா. இப்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே கல்யாணம் கமனீயம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்த பிரியா பவானி சங்கர் இரண்டாவதாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கோபிசந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தமிழில் அவர் இந்தியன் 2, விஷால் –ஹரி படம் என பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.