1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (17:02 IST)

நடிகர் விஜய்யுடன் ஷாப்பிங் செய்த திரிஷா?

vijay -Trisha
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்துள்ளார்.   

இப்படத்தில் விஜயுடன் இணைந்து, திரிஷா, அர்ஜூன், மிஸ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும்  அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில்,   நடிகர் விஜய் வெகேசனுக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். அவர் விமானத்தில் இருந்து புறப்படும் வீடியோ வைரலானது.

இந்த  நிலையில்,   நடிகர் விஜய் நார்வே சென்றுள்ளதாகவும், நடிகை திரிஷாவும் அங்கு சென்றுள்ளதாகவும், இருவரும்  நார்வேயின் ஓஸ்லோவில்   ஷாப்பிங் சென்றதாகக் கூறி   புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆதி, கில்லி, திருப்பாச்சி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் மற்றும் திரிஷா லியோவில் இணைந்து நடித்துள்ளனர், விஜய்,  திரிஷா  இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று  கூறப்படுகிறது.