1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (07:51 IST)

பிரபல நடிகையை மணம் முடிக்கும் அசோக் செல்வன்… யார் அந்த நடிகை?

தமிழ் சினிமாவில் சூதுகவ்வும் திரைப்படம் மூலமாக கவனம் பெற்றவர் அசோக் செல்வன். அதன் பின்னர் அவர் பல படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, மன்மத லீலை மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில் இப்போது அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பிரபல தயாரிப்பாளரின் மகளான பிரபல நடிகை ஒருவரை அவர் காதலிப்பதாகவும், அதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இப்போது அந்த நடிகை யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனைதான் அசோக் செல்வன் திருமணம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.