புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 20 ஜனவரி 2019 (17:21 IST)

'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் பழ.கருப்பையா, ராதாரவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் என மூன்று வில்லன்கள் இருந்த நிலையில் இன்று தொடங்கியுள்ள 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

தளபதி 63 படத்தில் ஆனந்த்பாபு, டேனியல் பாலாஜி மற்றும் சாய்தீனா ஆகிய மூவரும் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்கவிருப்பது இன்று வெளியாகியுள்ள குரூப் புகைப்படத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மூவரை தவிர முக்கிய வில்லன் கேரக்டர் ஒன்றும் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒருவர்தான் நயன்தாரா என்றும், இவர் தவிர கீர்த்திசுரேஷ் மற்றும் ஒரு பிரபல நடிகை இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹமான் இசையமைப்பில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.