1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 20 ஜனவரி 2019 (12:33 IST)

பூஜையுடன் 'தளபதி 63 ' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

ஏஜிஎஸ் புரொடக்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், விவேக் உள்பட பலர் நடிக்கிறார்கள்.  இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். 
 
தளபதி 63 படத்தின் பூஜை இன்று நடந்தது. இதில் விஜய், அட்லி உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்காக சென்னை பின்னி மில்லில் அரங்கு அமைத்துள்ளனர். நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.