1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Modified: ஞாயிறு, 20 ஜனவரி 2019 (11:05 IST)

மோடி சர்கார்! கடன் சர்கார்! ... அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்தியாவின் 14வது பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்றார். இவர் பதவியேற்ற சில மாதங்களில் பொருளாதார சீர்திருத்தம், கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். 
 
இந்நிலையில் மோடி தலைமையிலான நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 50 சதவீதம் அளவில் கடன் தொகை உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் இந்தியாவின் கடன் மதிப்பு 54 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாக நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
   
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரையில் மத்திய அரசுக்கு உள்ள கடன் தொகை 82 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. அதாவது 49 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல பொதுக்கடனை பொறுத்தவரை 48 லட்சம் கோடியிலிருந்து 73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.