1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 19 ஜனவரி 2019 (16:14 IST)

தளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா?

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளது அனைவரும் அறிந்ததே.  தளபதி விஜய்க்கு இது 63-வது படம் ஆகும். பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 
இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்காக சென்னை பின்னி மில்லில் அரங்கு அமைத்துள்ளனர்.  இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். மேலும் 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
இதற்காக கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருகிறார்கள். விவேக், பரியேறும் பெருமாள் படத்தில் பிரபலமான கதிர், யோகிபாபு ஆகியோரும் நடிக்கிறார்கள்.