1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (15:07 IST)

தியேட்டர் விசிட்லாம் வேண்டாம்… நயன்தாராவை தடுத்த திரையரங்க உரிமையாளர்!

நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான கனெக்ட் திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

திருமணத்துக்குப் பிறகு  நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்காக நயன்தாரா ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்தபடம் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது என கருத்துகள் எழுந்துள்ளன.

நயன்தாரா தான் நடிக்கும் படங்களுக்கு பொதுவாக ப்ரமோஷன்கள் செய்வதில்லை. ஆனால், இந்த படத்தை தன்னுடைய கணவரே தயாரித்ததால், ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஆனாலும் படம் ரசிகர்களைக் கவரவில்லை. அதற்கு படத்தின் மோசமான திரைக்கதையும், உருவாக்கமுமே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக மதுரையில் ஒரு தியேட்டருக்கு நேரடியாக செல்லலாம் என நயன்தாரா முடிவெடித்தாராம்.  ஆனால் படத்துக்கு சுத்தமாக கூட்டமே வராததால் சம்மந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர் நயன்தாராவை வரவேண்டாம் என அழைத்து சொல்லிவிட்டாராம்.