வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (14:44 IST)

நயன்தாரா ப்ரமோஷன் செய்தும் வசூலில் அடிவாங்கிய கனெக்ட்!

கனெக்ட் படத்துக்காக நயன்தாரா பல சேனல்களில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு  நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்காக நயன்தாரா ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்தபடம் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது என கருத்துகள் எழுந்துள்ளன.

நயன்தாரா தான் நடிக்கும் படங்களுக்கு பொதுவாக ப்ரமோஷன்கள் செய்வதில்லை. ஆனால், இந்த படத்தை தன்னுடைய கணவரே தயாரித்ததால், ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஆனாலும் படம் ரசிகர்களைக் கவரவில்லை. அதற்கு படத்தின் மோசமான திரைக்கதையும், உருவாக்கமுமே காரணம் என சொல்லப்படுகிறது.