செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 24 டிசம்பர் 2022 (14:53 IST)

'தி கிரேட் இந்தியன் கிட்சன்’ திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

the great indian kitchen
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிட்சன் மற்றும் டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் அடுத்தடுத்து டிசம்பர் 29 மற்றும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான புரமோஷன் பணிகள் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ராஜேஷ் ஐஸ்வர்யா நடித்த தி கிரேட் இந்தியன் கிட்சன் என்ற திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் ஒரு நடிகையின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியானால் இரண்டு படங்களின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என கருதி இதை அடுத்து இரண்டு பட தயாரிப்பாளர்களும் முடிவு செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது
 
இதனை அடுத்து டிரைவர் ஜமுனா திரைப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என்று, தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran