தொடர்புடைய செய்திகள்
- சிம்பு - வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்? சிங்கத்தின் ஆட்டம் விரைவில் என பதிவு..!
- தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் யோகி பாபு… பிரம்மானந்தாவுடன் கூட்டணி!
- முதல் முறையாக விளம்பரத்தில் டி ராஜேந்தர்… சிம்பு பகிர்ந்த வீடியோ!
- அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?
- சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!
தள்ளிப் போகும் சிம்பு 49… விக்ரம்மை இயக்குகிறாரா ராம்குமார் பாலகிருஷ்ணன்?
சில மாதங்களுக்கு முன்னர் சிம்புவின் பிறந்தநாளின் போது அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. அதில் சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம் முதலில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
கல்லூரியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சந்தானமும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். டாவ்ன் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் வந்த நிலையில் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதனால் இந்த படம் தாமதமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் விக்ரம்மை வைத்து ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. விக்ரம்மின் 64 ஆவது படத்தை பிரேம்குமார் இயக்க, 65 ஆவது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
