திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:26 IST)

நயன்தாராவுக்கு ஜி பி முத்து எழுதிய கடிதம்…!

நடிகர் நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார்.

டிக்டாக் மூலமாக பிரபலம் ஆன ஜி பி முத்து ஆரம்பத்தில் ட்ரோல்களுக்கும், கேலிகளுக்கும் ஆளானார். ஆனால் தன்னுடைய இயல்பான பேச்சாலும், வெகுளித்தனத்தாலும், இன்று முன்னணி யுடியூபர் ஆகி இருக்கிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் தன் குழந்தைகளை விட்டு இருக்க முடியாது என்று சொல்லி, அவர் வெளியேறினார்.

அதையடுத்து தொடர்ந்து சமூகவலைதளங்களில் வீடியோக்களைப் பகிர்ந்துவரும் அவர், இப்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ள அவர் சமீபத்தில் கொடுத்த ஒரு நேர்காணலில் நடிகை நயன்தாராவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நயன்தாராவோடு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பகிரவேண்டும் என்பது தன்னுடைய ஆசை எனக் கூறியுள்ளார்