ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Naveen
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (11:37 IST)

தலைவர் பதவி ஒன்னும் சும்மா இல்ல தம்பி! - நிக்சனுக்கு பிக்பாஸ் வைத்த ஆப்பு மணி!

Nixen
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகியுள்ள நிக்சனுக்கு புது ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார் பிக்பாஸ்.



பிக் பாஸ் இது தனியார் தொலைக்காட்சியில்    ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியாகும் இது ஆறு சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசன். ஒளிபரப்பப்படுகிறது .இந்த சீசனில் எதிர்பாரத பல சர்ச்சைகள் மற்றும் அதிரடி திருப்பங்கள் நடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் ஒருவர்தான் நிக்சன் இவர் முதலில் தனது விளையாட்டை சிறப்பாக வெளிபடுத்தி கொண்டுவந்தார்.

ஆனால் பின்பு அதே வீட்டில் மற்றொரு போட்டியாளரான ஐஷவிடம் காதல் வசப்பட்டார். இதனால் நிக்சன் காதல் மயக்கத்தில் இருந்ததால் தன் விளையாட்டை விளையாடாமல் ஐஷூ பின்னால்  சுற்றிக் கொண்டிருந்தார். இந்த காதல் கதை ஒரு கட்டத்தில்  முடிவுக்கு வந்தது ஐஷூவை நாமினேஷன் செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள்.அதிலிருந்து நிக்சன் மீண்டு வந்து தனது விளையாட்டை தொடங்கினார்.

பின்பு நிக்சன்  வீட்டில் இருந்த பல போட்டியாளர்களை சரமாரியாக விமர்சித்தார். நீங்கள் உங்களுக்கு  கொடுக்கப்பட்ட விதிகளை மீறிவிட்டீர்கள். தலைவர் பதவிக்கு வரும் போட்டியாளர்கள் யாரும் சரியாக பதவியை  கையாளவில்லை என கடுமையாக குற்றம்சாட்டினார். ஒரு கட்டத்தில் பிக் பாஸ் அணியையே விமர்சித்தார். பிக்பாஸே நிக்சனை அழைத்து விதிமீறலுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என 10 வகை தண்டனைகளை நிக்சனிடம் கேட்டு வாங்கினார். அந்த தண்டனைகள் மீண்டும் நிக்சன் மீதே திரும்பலாம் என வார இறுதியில் கமல்ஹாசன் கூட சூசகமாக சொன்னார்.

 "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று கேள்வி பட்டு  இருப்போம்.அதேபோல் நிக்சன் தலைவர் பதவிக்கு வந்துள்ள நிலையில் வந்த முதல் நாளே அவரது பதவிக்கு மேல் கத்தியை தொங்க விட்டுவிட்டார் பிக்பாஸ். பிக் பாஸ்  வீட்டின் உள்ளே ஒரு மணியை  வைத்து போட்டியாளர்கள்  யாராவது ஒருவர் இந்த வாரம் தலைவர் பதவியில் இருக்கும் நிக்சன் சரியான முறையில் நிர்வாக பொறுப்பை நடத்தவில்லை மற்றும் எனக்கு அநீதி இழைக்கபட்டுள்ளது என நினைத்தால் நியாயம் கேட்டு அந்த மணியை அடிக்கலாம். இந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிக்சன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவர். அதோடு அவர் நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி வீட்டினுள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிக்சனை விரும்பாத சிலர் புகார் எழுப்பி நிக்சனை நேரடி நாமினேஷன் செய்யலாமா என்றும் திட்டமிட்டு வருகின்றனர். நிக்சன் தலைவர் பதவியில் நீடிப்பாரா இல்லை, பதவி பறிபோய் நாமினேஷன் செல்வாரா என்று காத்திருந்து பார்ப்போம்...

Edit by Naveen