திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (17:14 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறிய போட்டியாளர்.. நாளை யார்?

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்று பிராவா வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 55 நாட்கள் ஆக ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் இந்த வாரம் உள்ளே வரப்போகிறார்கள். 
 
அதற்கு பதிலாக பிக் பாஸ் வீட்டில் இருந்து 2 போட்டியாளர்கள் வெளியேறப் போகிறார்கள். இந்த நிலையில் இன்று பிராவோ வெளியேற போவதாகவும் நாளை அக்ஷயா வெளியேறப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அதேபோல் பிக் பாஸ் வீட்டிற்குள் விஜய் வர்மா, வினுஷா மற்றும் அனன்யா ஆகிய மூவரும் உள்ளே வரப்போவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் கூடுதலாக விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அடுத்த வார பிக்பாஸ் கேப்டனாக நிக்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran