ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 30 ஜனவரி 2020 (12:23 IST)

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் டி.எஸ். ராகவேந்தரா திடீர் மரணம்!

தமிழ் நடிகரும், பாடகரும், இசையமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்திரா பல்வேறு படங்களில் குணசித்திர வேடமேற்று நடித்துள்ளார்.  குறிப்பாக "வைதேகி காத்திருந்தாள்" படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்த அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெருமளவில் ரசிக்கக்கப்பட்டது. 
 
அத்துடன் உயிர், படிக்காத பாடம், யாக சாலை ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னனி பாடகியான சுலோச்சனா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 75 வயதாகும் இவர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த செய்தியை நடிகர் சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
 
அவரது இறுதி சடங்குகள் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை கே கே நகரில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். இவரது மரண செய்தி தமிழ் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.