1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (11:36 IST)

ரஜினியை அடுத்து ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ஆவணப்படத்தில் பிரபல நடிகர்!

டிஸ்கவரி சேனல் தயாரிப்பில் பேரிகிரில்\ஸ் இயக்கத்தில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த ஆவணப்படத்தில் உலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே
 
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டார் என்பதும் இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்தியாவில் மோடி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர்களை அடுத்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய்குமார் இந்த ஆவணப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
ரஜினியை அடுத்து அவருடன் ’2.0’ படத்தில் நடித்த அக்ஷய்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது