செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (11:31 IST)

அந்த சீன கப்பலை திருப்பி அனுப்பிடுங்க! – ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை துறைமுகத்திற்கு மருத்துவ கழிவுகளோடு வந்திருக்கும் கப்பலை அனுமதிக்க கூடாது என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து மருத்துவ கழிவுகளுடன் கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது. மருத்துவ கழிவுகள் உள்ளதால் அந்த கப்பலை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். தற்சமயம் சீனாவின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவி மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் இந்த கப்பல் சென்னை துறைமுகம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ”மருத்துவக் கழிவுகளுடன் சென்னை கடலுக்கு வந்துள்ள சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது. மருத்துவக் கழிவுகளை இறக்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடனடியாக சீன மருத்துவக் கழிவு கப்பலை சென்னை கடல் பகுதியில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.