திங்கள், 9 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (16:15 IST)

மறைந்த பிரபல நடிகர் சார்லி சாப்ளினின் மகள் காலமானார்

josapin Chaplin
மறைந்த பிரபல நடிகர் சார்லி சாப்ளினின் மகள் நடிகை ஜோசபின் சாப்ளின் காலமானார்.

மறைந்த பிரபல நடிகர் சார்லி சாப்ளின். இவரது மனைவி ஊனா ஓ நீல், இத்தம்பதிக்கு மொத்தம் 8 குழந்தைகள். இதில், 3 வது குழந்தை கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா மோனிகா நகரில் ஜோசபின் சாப்ளின் பிறந்தார்.

அதன்பின்னர், புகழ்பெற்ற  நடிகரும் அவரது தந்தையுமான சாப்ளினின் லைம்லைட் என்ற படத்தில் ஜோசபின் சாப்ளின்.  இளம் நடிகையாக அறிமுகமானார்.

இதையடுத்து, தி கேண்டரி டேல்ஸ், லாடியர் டெஸ், எஸ்கேப் டு தி சன் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருந்தார்.

இந்த  நிலையில், பாரீஸ் நகரில் வசித்து வந்த ஜோசபின் சாப்ளின் கடந்த 13 ஆம் தேதி காலமானதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 74 ஆகும்.  இவருக்கு, ஆர்தர் மற்றும் ஜூலியன் ரோனட் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.