திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (15:50 IST)

பிரபல பாடகியின் உடல்நிலை மருத்துவமனையில் கவலைக்கிடம்!

madonna
அமெரிக்க இசைக் கலைஞரும் பாப் பாடகருமான மடோன்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் மடோன்னா. இவர் லைக் எ வர்ஜின், ட்ரூ ப்ளூ, ரே ஆப் லைட் உள்ளிட்ட பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டு  ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவரது இசை ஆல்பங்கள் அதிகளவில் விற்று சாதனை படைத்துள்ளனன். பாடகி, பாடலாசிரியர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகக் கலைஞராக  உள்ளார்.

மடோனா(64) செரிஷ் என்ற படத்தில் நடித்தபோது, பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.