புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (17:33 IST)

'தளபதி 69’ படத்தின் மாஸ் அறிவிப்பு.. 5 நிமிட வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்..!

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் தளபதி 69 படத்தின் அறிவிப்பை வீடியோவாக பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்ஷன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் விஜய்யின் படங்கள் குறித்து அவரது ரசிகர்கள் கூறும் கருத்துக்கள் உள்ளன என்பதும் ஐந்து நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் பல ரசிகர்கள் விஜய்யை புகழ்ந்து பாராட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவின் இறுதியில் தளபதி 69 திரைப்படத்தின் அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் விஜய், சமந்தா, சிம்ரன், பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran