வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (14:13 IST)

சினிமாவில் இருந்து விஜய் ஓய்வு பெற மாட்டார்: சசிகுமார் உறுதி

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இன்னும் ஒரே ஒரு படம் நடித்துவிட்டு அவர் சினிமாவில் இருந்து அவர் ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் சினிமாவில் இருந்து விஜய் விலக மாட்டார் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69 வது திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.

இந்த நிலையில்  ’நந்தன்’ என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சசிகுமார் விஜய் சினிமாவில் இருந்து விலக மாட்டார் என்று கூறியுள்ளார்.

விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்றும் அவர் மீண்டும் நடிக்க வருவார் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அரசியலில் இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார்  என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva