வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (09:43 IST)

சிம்ரன் கேட்ட உதவி… நாசூக்காக மறுத்த விஜய்!

90 கள் மற்றும் 2000களின் தொடக்க ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக சிம்ரன் இருந்தார். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அவர் சினிமாவை விட்டு விலகினார். பின்னர் இப்போது ரி எண்ட்ரி கொடுத்து முன்னணி நடிகர்களோடு நடித்து வருகிறார்.

சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். தி லாஸ்ட் ஒன் என்ற இந்த படத்தை சிம்ரனின் கணவரே தயாரிக்கிறார்.

தொடர்ந்து சினிமா தயாரிப்பில் ஈடுபட நினைக்கும் சிம்ரன், தன்னுடைய நெருங்கிய நண்பரான விஜய்யிடம் தங்கள் நிறுவனத்துக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்தாராம். ஆனால் அதை நாசூக்காக மறுத்துவிடடாராம் விஜய், தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய், இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கும் தயாரிப்பாளர் உறுதியாகிவிட்டார்.

மேலும் தன்னுடைய படத்தை தயாரித்து அதை வெளியிடுவது சாதாரண வேலையில்லை என்றும் எதிர்வரும் பல பிரச்சனைகளை அவர்களால் சமாளிக்க முடியாது என்றும் அறிவுரைக் கூறி அனுப்பிவிட்டாராம். இதற்கிடையில் விஜய்யின் அடுத்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்க் உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.