எல்லா படத்துலயும் ஒன்னா நடிச்சா இப்படித்தான் ஆகும்

devi 2
Last Modified ஞாயிறு, 26 மே 2019 (18:42 IST)
தமிழில் நயன்தாரா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘காமோஷி’யில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தில் பிரபு தேவாவும் நடித்திருக்கிறார். இதே தமன்னா-பிரபுதேவா கூட்டணியில் ஹிட் அடித்த தேவி படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் கமோஷி, தேவி-2 இரண்டு படங்களுமே மே 31ல் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் இரண்டிலுமே தமன்னா-பிரபுதேவா நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு குழப்பங்கள் ஏற்படும். இது இரண்டு படத்தின் வசூலிலுமே பாதிப்பை ஏற்படுத்தும் என ஒருவழியாக பேசி காமோஷி படத்தை ஜூன் 14 அன்று ரிலீஸ் செய்வதாகவும், தேவி2 மே 31ல் ரிலீஸ் செய்வதாகவும் முடிவு செய்துள்ளனர்.

ஒருவேளை சரியாக ஓடவில்லை என்றால் அதே ஜோடி நடித்துள்ள காமோஷி படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என காமோஷி குழு கவலையோடு இருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :