கர்ப்பமான எமி ஜாக்சன் – வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

எமி
Last Modified சனி, 25 மே 2019 (19:41 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.

எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.

கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய எமி, தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர் அந்த வீடியோவில் “நான் கருத்தரித்து 22 வாரங்கள் ஆகிவிட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால வீடியோக்களை பதிவேற்றுவேன்” என கூறியிருக்கிறார்.இதில் மேலும் படிக்கவும் :