செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 21 மே 2019 (17:50 IST)

’பாகுபலி ஹீரோ பிரபாஸின் ’ வைரலாகும் இன்ஸ்டா பதிவு’ : ரசிகர்கள் கொண்டாட்டம்

சில வருடங்களுக்கு முன்னர் சந்திர மௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த பாகுபலி 1 , பாகுபலி 2 ஆகிய திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் மிகப்பெரும் வசூல்வேட்டைநடத்தியது. குறிப்பாக சீனத்தில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
இந்நிலையில் பாகுபலி படத்திற்குப் பின்னர் பிரபாஸின் இமேஜ் பல மடங்கு உயர்ந்துள்ளதால் அவரது அடுத்த படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
 
இயக்குநர் சுஜித் கதை எழுதி இயக்கிவரும் சாஹூ என்ற படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாகவும்,  ஷ்ரத்தா கபூர் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். 
 
இப்படத்திற்கு  இசான் - லாய் இசையமைத்துள்ளார். ரூ. 150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக சாஹூ தயாராகிவருகிறது. நடிகர் அருண்விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் சந்திரமெளலி படத்திற்குப் பின்னர் தனது மார்கெட் உயர்ந்துள்ளதால் பிரபாஸ் தனது சினிமாவில் ஓவ்வொரு அடியாக நிதானமாக கால் எடுத்துவைத்துவருகிறார் என்று டோலிவுட் வட்டாரஙகள் மற்றும் அவரது நண்பர்கள் கூறிவருவதாக பேச்சு அடிபடுகிறது.