திங்கள், 8 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Bala
Last Modified: திங்கள், 8 டிசம்பர் 2025 (18:04 IST)

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்
சமீபத்தில் தான் பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ வி எம் சரவணன் காலமானார். அந்த செய்தி திரையுலகினருக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை தந்தது. 86 வயதான ஏ வி எம் சரவணன் உடல் நலக்குறைவால் காலமானார் என தகவல் வெளியானது. இதைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் அவருடைய சில கருத்துக்களை கூறியிருக்கிறார். ஏவிஎம் சரவணனுக்கு பிறகு இனிமேல் அந்த ஏவிஎம் நிறுவனத்தை யார் நிர்வகிப்பார் என்பதை பற்றியும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
 
ஆரம்பத்தில் ஏவி மெய்யப்ப செட்டியார் காரைக்குடியில் ஒரு ஸ்டூடியோவை ஆரம்பித்தார். அதுதான் பிறகு சென்னையில் ஏவிஎம் நிறுவனமாக மாறியது. ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு நான்கு மகன்கள். அதில் மூத்த மகனுக்கும் மெய்யப்பசெட்டியாருக்கும் சில பல பிரச்சனைகள் ஏற்பட்டு அவருக்கு தனியாக ஒரு ஸ்டுடியோவை பிரித்து கொடுத்துவிட்டார் மெய்யப்ப செட்டியார். தற்போது அவரும் உயிருடன் இல்லை. ஆனால் மெய்யப்ப செட்டியாருக்கும் அவருடைய மூத்த மகனுக்கும் என்ன பிரச்சனை என்பது எனக்கு தெரியும்.
 
அதை இப்போது நான் சொல்ல முடியாது என்று பயில்வான் ரங்கநாதன் கூறினார். அதன் பிறகு ஏவிஎம் நிறுவனத்தை ஏவிஎம் சரவணன் தலைமையில் அண்ணன் தம்பி மூவரும் நடத்தி வந்தார்கள். சமீபகாலமாக ஏவிஎம் சரவணன் படங்களை தயாரிப்பதை நிறுத்தி விட்டார். அது கூட அவருக்கு வேதனையாக இல்லை. ஏவிஎம் சரவணன் பேத்தி ஒருவர் ஏவிஎம் சரவணனுக்கு எதிராக சொத்து பிரச்சனை காரணமாக ஒரு வழக்கு போட்டிருக்கிறாராம். அதுதான் அவருக்கு மிகப்பெரிய வேதனையாக இருந்தது. அதுதான் ஒரு கரும்புள்ளியாகவும் மாறியது என பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
 
ஏன் படங்களை தயாரிப்பதை நிறுத்தி விட்டீர்கள் என கேட்டதற்கு சினிமா முன்பு மாதிரி ஆரோக்கியமாக இல்லை. எல்லா நடிகர்களும் இங்கு வந்து தான் கதை கேட்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் மொத்தமாக மாறிவிட்டது. அதனால்தான் படங்களை அவர் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டார் என பயில்வான் ரங்கநாதன் கூறினார். எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என அனைவருமே இங்கு வந்து தான் கதை கேட்டு இருக்கிறார்கள். அதில் பாக்யராஜ் மட்டும் தான் முந்தானை முடிச்சு படத்தின் கதையை அங்கு வந்து நான் சொல்ல மாட்டேன் எனக் கூற அதன் பிறகு சில பேர் ஏவிஎம் நிறுவனத்தை பற்றிய பெருமைகளை சொல்லி பாக்கியராஜுக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.
 
பிறகு தான் பாக்கியராஜ் ஏவிஎம் நிறுவனத்தில் வந்து முந்தானை முடிச்சு கதையை சொன்னதாக ஒரு தகவல் இருக்கிறது. அவருடைய மனைவியின் பெயர் என்ன என்பது கூகுள் தளத்தில் இருக்காது .ஆனால் அவருடைய மனைவியின் பெயர் முத்துலட்சுமி. கடைசி காலம் வரை தனியாக தான் ஏவிஎம் சரவணன் இருந்தார். ஒரு மகன் ஒரு மகள் இருந்தும் அவர் தனியாக தான் இருந்தார். அவரை கவனித்துக் கொள்ள ஒரு வேலைக்கார பெண்மணி மட்டும் உடன் இருந்திருக்கிறார். அவர் சொல்லும் போது கூட ஐயா ரொம்ப மன வேதனையில் இருந்ததாக தெரிவித்தாராம்.