1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (12:15 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர் பற்றி கருத்து கூறிய சுஜா வருணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வொயில்ட் கார்டு மூலம் போட்டியாளராக நுழைந்தவர் சுஜா வருணி. 100வது நாட்கள் கொண்ட பிக்பாஸ்  நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில், மக்களின் குறைந்தபட்ச ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சுஜா தனது எண்ணத்தை பேஸ்புக் பதிவு செய்துள்ளார். அதில், மக்கள் பிரதிநிதி கமல் ஹாசனுக்கும், பிக்பாஸ் குழுவுக்கும் என் நன்றி. சமூக வலைத்தளங்களில் உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி என்னை  மீம்ஸ் போட்டு கலாய்த்ததை நான் நேர்மறையாக எடுத்துக் கொள்கின்றேன்.
 
பிக்பாஸ் பார்வையாளர்கள் சிலர் என்னை கடும் உழைப்பாளி எனவும், சிலர் சுயநலவாதி என்றும் கூறினர். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சிதானே, இதில் நான் சுயநலத்துடன் இருப்பதில் என்ன தவறு. நான் நானாகவே எப்போதுமே இருந்திருக்கிறேன். பிக்பாஸ் வீட்டில் கணேஷ், ஹரீஷைத் தவிர அனைவரும் நடிக்கிறார்கள்.

 
கமல் சார் எனக்கு ஊக்கம் கொடுத்தபோதே நான் வெற்றி பெற்றுவிட்டேன். மீண்டும் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்க வருவதில் மகிழ்ச்சி. இனி சரியான போட்டியாளர்களுக்கு மக்கள் ஓட்டு போடவேண்டும் என்பது என் விருப்பம்.
 
எனக்கு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.