செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (22:40 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச உடை: யார் காரணம்? வையாபுரி பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் சிலர் ஆபாச உடை அணிந்திருப்பதற்கு யார் காரணம் என்பதை வையாபுரி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.


 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்பது குறித்த சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.
 
இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன நடிகர் வையாபுரி பேட்டி ஒன்றில் கூறியபோது 'பிக்பாஸ் நிகழ்ச்சி தனது வாழ்க்கையில் ஒரு சிறந்த பாடம் என்றும், இந்த நிகழ்ச்சியில் போலி என்பதே இல்லை என்றும், காலை எழுந்திருப்பது முதல் இரவு தூங்கப்போகும் வரை அங்கு நடந்தது அனைத்துமே நிஜம் என்றும் கூறினார்.
 
மேலும் ஒருசில பங்கேற்பாளர்கள் அரைகுறை ஆபாச உடை அணிந்தது ஏன்? இதற்கு பிக்பாஸ் காரணமா? என்ற கேள்விக்கு பதிலளித்த வையாபுரி, 'பிக்பாஸ் போட்டியாளர்களின் உடைகளுக்கும் பிக்பாஸூக்கும் சம்பந்தமே இல்லை. அனைவரும் வீட்டில் இருந்து கொண்டு வந்த உடையத்தான் அணிந்தார். பங்கேற்பாளர்கள் வீட்டில் இருக்கும்போது எந்த உடை அணிந்தார்களோ அதே உடையைத்தான் பிக்பாஸ் வீட்டிலும் அணிந்தனர். நான் கைலிதான் அணிந்திருந்தேன்' என்று கூறினார்.