செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (23:59 IST)

விஜய் அரசியலுக்கு வரலாமா? கமல்ஹாசன் கூறும் கருத்து என்ன?

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது என்பது உறுதியாகிவிட்ட நிலையில் தமிழக மக்களுக்காக தமிழக முதல்வராகவும் பணியாற்ற விரும்புகிறேன் என்ற வார்த்தைகளும் கமல் வாயில் இருந்து வந்துவிட்டது.



 
 
இந்த நிலையில் கமலின் அரசியலுக்கு இடையூறாக இருப்பவர்கள் அனேகமாக ரஜினி மற்றும் விஜய் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. சினிமாவை பொருத்தவரையில் இருவருக்குமே கமல்ஹாசனைவிட மாஸ் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால் அது கமல்ஹாசனுக்கு போட்டியாக இருக்குமா? என்று கமலிடம் கேள்வி கேட்டபோது அதற்கு தம்பி விஜய் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், அதை அவர் செய்வார் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.
 
மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடன் சேருவீர்களா? என்ற கேள்விக்கு தேவையென்றால் சேர்த்து கொள்ளலாம் அதில் தவறில்லை' என்று பதிலளித்தார்