திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (11:26 IST)

ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து

நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்கும் திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய அரசு உங்களுக்கு விருது அறிவித்தால் அதனை ஏற்பீர்களா? என பத்திரிகையாளர்கள்  கேள்விக்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதனை ஏற்க மாட்டேன் என்றார்.

 
இதனை தொடர்ந்து அவரிடம் ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது, தகுதியான யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கூறியுள்ளார். அதில் நடிகர்களை மட்டும் அரசியலுக்கு வரலாமா என கேட்பது தேவையற்றது என்றார். அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறது வருகிறார்கள். நடிகர்கள் அரசியல் வருவது தவறு என்பதில் எனக்கு  உடன்பாடு இல்லை என பேசியுள்ளார்.