செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (15:03 IST)

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் நடிப்பது பெருமை… விஜய் சேதுபதி பெருந்தன்மை!

நடிகர் விஜய் சேதுபதி தான் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தான் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாரதிராஜா முன்பு ஒப்பந்தம் ஆனார். ஆனால் படப்பிடிப்பு நடக்க உள்ள டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சமவெளிப்பகுதியிலேயே குளிர் அதிகமாக இருக்கும். இந்நிலையில் காடுகளில் முழுப் படப்பிடிப்பும் நடக்க உள்ளதால் பாரதிராஜாவால் வயோதிகத்தின் காரணமாக குளிரை தாங்க முடியாத சூழல் உருவாகவே அப்படத்தில் அவர் விலகினாராம்.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆனார். விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆனதால் சூரிக்கான முக்கியத்துவம் குறையுமோ எனப் பேசப்பட்டது. ஆனால் இன்று இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி அந்த படம் பற்றி பேசும்போது ‘சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நான் நடிக்கிறேன் என்பது பெருமையான விஷயம்’ எனக் கூறி அந்த படத்தின் கதாநாயகன் சூரிதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.