புதிய ஸ்டுடியோவில் வெற்றிமாறன் படத்துக்கு இசை! இணையத்தில் வைரலான புகைப்படம்!
இளையராஜா இதுவரை இசையமைத்து வந்த பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினரோடு பிரச்சனை எழுந்ததை அடுத்து இப்போது புதிய ஸ்டுடியோவுக்கு மாறியுள்ளார்.
சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பல ஆண்டுகளாக இளையராஜா தனது படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், வழக்கை திரும்ப பெற்றால் அனுமதிப்பதாக பிரசாத் ஸ்டுடியோ தெரிவித்ததால் வழக்கை திரும்ப பெற்றார். அங்கே இளையராஜாவின் இசைக்கருவிகள் எல்லாம் சேதப்படுத்தும் அளவுக்கு சென்றன.
இதனால் மனமுடைந்த இளையராஜா அங்கு சென்று ஒரு தியானத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆசையைக் கூட கைவிட்டார். இந்நிலையில் இப்போது அவர் இசைப்பணிகளை புது இடத்துக்கு மாற்றியுள்ளார். வெற்றிமாறன் இசையமைக்கும் புதிய படத்துக்கான பாடல்களை அங்கிருந்தே அவர் மேற்கொள்கிறார்.
இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.