விஜய் சேதுபதி வரவால் வெற்றிமாறன் படத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றம்!

Last Modified செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:26 IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தை ரிலீஸ் செய்வதில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளதாம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாரதிராஜா முன்பு ஒப்பந்தம் ஆனார். ஆனால் படப்பிடிப்பு நடக்க உள்ள டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சமவெளிப்பகுதியிலேயே குளிர் அதிகமாக இருக்கும். இந்நிலையில் காடுகளில் முழுப் படப்பிடிப்பும் நடக்க உள்ளதால் பாரதிராஜாவால் வயோதிகத்தின் காரணமாக குளிரை தாங்க முடியாத சூழல் உருவாகவே அப்படத்தில் அவர் விலகினாராம்.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கதாநாயகனாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தன் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் சூரிக்கு வில்லனாக நடிக்க சம்மதித்து இருப்பது வெற்றிமாறனுக்காகவும், அந்த கதைக்காகவும்தான் என சொல்லப்படுகிறது.

முதலில் இந்த படத்தை குறைவான பட்ஜெட்டில் எடுத்து நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலிஸ் செய்வதாகதான் முடிவு செய்திருந்தாராம் வெற்றிமாறன். ஆனால் இப்போது விஜய் சேதுபதி படத்துக்குள் வந்துள்ள நிலையில் பட்ஜெட் எகிறியதால் படத்தை திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :