வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2024 (11:58 IST)

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

 

 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த படம் ‘அமரன்’. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகி கடந்த 24 நாட்களை தாண்டியும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

 

மேலும் படம் ரிலீஸாகி குறைந்த நாட்களிலேயே ரூ.300 கோடி வசூலை தாண்டிய அமரன், சிவகார்த்திகேயனின் கெரியரில் அதிகம் வசூலித்த படமாகவும் மாறியுள்ளது. இப்படியான அமரன் படம் மற்றொரு வகையில் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், விஜய்யின் சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளது.

 

இதே ஆண்டில் அமரனுக்கு முன்பாக வெளியான விஜய்யின் ‘தி கோட்’, ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவுகளை கடந்து சாதனை படைத்துள்ளது அமரன். புக் மை ஷோ செயலி மற்றும் வலைதளம் மூலமாக அமரன் படத்திற்கு இதுவரை 4.55 மில்லியன் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. விஜய்யின் தி கோட் படத்திற்கு 4.5 மில்லியன் டிக்கெட்டுகளும், வேட்டையன் படத்திற்கு 2.7 மில்லியன் டிக்கெட்டுகளும் விற்கப்பட்ட நிலையில், கணக்கீடாக அமரன் அந்த படங்களின் டிக்கெட் விற்பனையை முறியடித்துள்ளது.

 

Edit by Prasanth.K