செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2024 (17:32 IST)

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி.. என்ன காரணம்?

RJ Balaji
நடிகர் சிவகார்த்திகேயனிடம், நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி மன்னிப்பு கேட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரேடியோ ஆர்ஜேவாக இருந்து, அதன் பிறகு காமெடி நடிகராக மாறிய ஆர்ஜே. பாலாஜி, தற்போது ஹீரோவாகவும் நடித்து வருவதோடு, இயக்குனராகவும் உள்ளார். சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ள ஆர்.ஜே. பாலாஜி, தா நடித்த 'சோர்க்கவாசல்' திரைப்படத்தையும் அடுத்த வாரம் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனிடம் ஆர்ஜே. பாலாஜி மன்னிப்பு கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்காக ஒரு கிண்டல் செய்யும் நிகழ்ச்சியை தான் செய்ததாகவும், 2014 ஆம் ஆண்டு நடத்திய அந்த நிகழ்ச்சி விருது வழங்கும் விழாவை கிண்டல் செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அப்போது சிவகார்த்திகேயன் சில மேடைகளில் அழுது கொண்டிருந்தார். அதை நான் கிண்டல் செய்ததாகவும் கூறியுள்ளார். அப்போது செய்யும் போது தனக்கு தவறாக தோன்றவில்லை என்றும், ஆனால் அதை டிவியில் பார்க்கும்போது எனக்கு தவறாக தோன்றியது என்றும் அவர் கூறியுள்ளார். அதன் பின்னர், சிவகார்த்திகேயனுக்கு தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்திய அந்த நிகழ்வை, 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Edited by Siva